ஒரே நாளில் 2000 பேர் பலி! தத்தளிக்கும் வல்லரசு நாடு!

ஒரே நாளில் 2000 பேர் பலி! தத்தளிக்கும் வல்லரசு நாடு!


2000 people died one day in america

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்தியாவில் சற்று குறைவாக இருந்தது. இந்தியாவில் பாரத பிரதமர் மோடி சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியதால், இந்த கொடூர வைரஸ் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு வருகின்றது.

America

உலகின் வளர்ந்த நாடான அமெரிக்கா, கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்து வருகின்றது.  உலக அளவில் அமெரிக்கா  தான், கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.  

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா  வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.