உலகம்

கொரோனா நேரத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு! போலீசார் உட்பட 13 பேர் பரிதாப பலி!

Summary:

13people died in canada

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் போலீசார் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே போலீஸ் வாகனத்தில் காவலர் போல உடை அணிந்து வந்த போலி நபரான கெப்ரியல் வார்ட்மென் என்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 

அந்த மர்மநபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பெண் போலீசார் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர்.  மேலும், மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.  உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் அந்த நபரும் உயிரிழந்தது தெரிய வந்தது. ஒருபுறம் கொரோனா உலுக்கி வரும் நிலையில் இந்த இந்தத் துப்பாக்கிச் சூடு கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement