12 அடி நீள ராஜ நாகம்... கையால் பிடிக்கும் வாலிபர்.. சீறி எழுந்த நாகம்... வைரலாகும் வீடியோ..!

12 அடி நீள ராஜ நாகம்... கையால் பிடிக்கும் வாலிபர்.. சீறி எழுந்த நாகம்... வைரலாகும் வீடியோ..!



12-feet-long-raja-nagam-a-young-man-holds-it-with-his-h

12 அடி நீளம் ராஜநாகத்தை கையால் பிடிக்கும் வாலிபர், சீறி எழுந்த ராஜ நாகம் ஒரு நிமிடம் ஆடி போன வாலிபர், பரவி வரும் வீடியோ.

அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் ஒன்று வந்துள்ளது. அந்த நாகத்தை பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முயன்றார். 

ராஜ நாகத்தின் வாலை இழுத்துப்பிடித்து நிலை நிறுத்த முயன்றார். ஒருகட்டத்தில் அந்த ராஜநாகம் மைக் ஹோல்ஸ்டனை பார்த்து பயங்கரமாக சீறி எழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்து போனார். ஆள் உயரத்திற்கு தலையை தூக்கி சீறியதை கண்டு மைக் ஹோல்ஸ்டன் ஒரு நொடி ஆடிபோய் விட்டார். இவை அனைத்தும் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். மிக அரிதாக கண்களில் படும் இந்த ராஜநாகம் மிகவும் விஷ தன்மை கொண்டது. கூடு கட்டி முட்டை இடும் வகையை சேர்ந்த ஒரே பாம்பு ராஜ நாகம் தான். மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் ராஜநாகத்தின் விஷத்தன்மை மிகவும் வீரியமானது.

இந்நிலையில், இந்த வீடியோவை 5.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இவ்வளவு பயங்கரமான பாம்பை, வெறும் கைகளால் கையாண்ட அவரை, இது போன்ற விபரீத விளையாட்டுகளை விளையாட வேண்டாம் எனவும் அந்த நபர் மரணத்துடன் விளையாடுகிறார் என சமூக தளவாசிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.