வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீடியோ கேம் விளையாடிய 11 வயது சிறுவன்... தந்தையின் அதிரடி செயல்!!
சீனாவின் ஷென்சென் பகுதியை சேர்ந்தவர் ஹுவாங். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் இரவில் உறங்க செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு நள்ளிரவு 1 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் படுக்கையறையில் வீடியோ கேம் விளையாடியுள்ளான். இதனை கண்டு கடும் கோபமடைந்துள்ளார் ஹுவாங்.
தனது மகனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்த ஹுவாங் அவருக்கு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளார். அதன்படி அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதால் என்ன நடக்கும் என்பதை தனது மகனுக்கு புரியவைக்க நினைத்துள்ளார். அதனால் இரவு முழுவதும் மகனை தூங்கவிடாமல் மகனை வீடியோ கேம் விளையாட வைத்துள்ளார்.
நள்ளிரவு 1 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 17 மணி நேரம் சிறுவனை எங்கும் நகரவிடாமல் தொடர்ந்து மொபைலில் வீடியோ கேம் விளையாட வைத்து கடுமையான தண்டனையை மகனுக்கு கொடுத்துள்ளார். மகன் மன்னிப்பு கேட்டும் விடாமல் அவனை விளையாட வைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மகன் வாத்தி எடுக்கவே அவனிடம் எழுதி வாங்கி விட்டு விளையாட்டை கைவிடுமாறு கூறியுள்ளார். அந்த சிறுவனும் தந்தையிடம் இனி பொம்மை மற்றும் மொபைல் போனில் விளையாட மாட்டேன் என எழுதி கொடுத்துள்ளான். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.