90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
கொரோனா வைரஸில் இருந்து உயிர் பிழைத்த 100 வயது முதியவர்..! மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 70 கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் 100 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்துள சம்பவம் அனைவர்க்கும் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 100 வயது முதியவர் ஒருவர் கொரோனா காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்சைமர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயும் என ஏகப்பட்ட பாதிப்புகள் அவருக்கு இருந்த நிலையில், கடந்த 13 நாட்களா தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 100 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி அவர் மார்ச் 7ம் தேதி வீடு திரும்பியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வைரஸ் தடுப்பு மருந்துகள், பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை மற்றும் சீனாவின் பாரம்பரிய சிகிச்சையும் அந்த முதியவர் குணமாக உதவி செய்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு பிரச்சனைகள் இருந்து, 100 வயது முதியவர் கொரோனவை எதிர்த்து போராடி அதில் இருந்து மீண்டு வந்திருப்பது அனைவர்க்கும் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.