AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
போலீஸை கேள்வி கேக்க ஆள் இல்லையா? ஹெல்மெட்டுக்கு FINE போடும் இடத்திலேயே விதி மீறிய போலீஸ்! இளைஞரின் துணிச்சல் செயலின் காட்சி...
சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் நேரடியாக கேள்வி எழுப்பும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதையே பிரதிபலிக்கும் விதமாக தற்போது ஒரு புதிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போலீஸ் ஹெல்மெட் சோதனை நேரில் பதிவு
இந்த வைரல் இன்ஸ்டாகிராம் காணொளியில், போலீசார் சாலையில் வாகனங்களை நிறுத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அச்சமயம் நான்கு பேர் பயணிக்கும் ஒரு பைக் வந்தபோது, ஓட்டுனர் போலீசாரிடம், “நீங்கள் நான்கு பேர் இருக்கிறீர்கள், ஆனால் ஹெல்மெட் இரண்டு தான். உங்களுக்கு யார் ஃபைன் போடப் போகிறார்கள்?” என்று நேரடியாக கேள்வி எழுப்புகிறார்.
இதையும் படிங்க: அய்யோ.... நொடியில் வந்த நரி! குழந்தையின் காலை கடித்து இழுத்து..... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு
அங்கு நடக்கும் அனைத்தையும் அந்த இளைஞர் மொபைலில் பதிவு செய்து உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த Instagram காணொளி வேகமாக பரவி, பல நெட்டிசன்கள் போலீசிடம் கேள்வி எழுப்பிய அந்த செயலை பாராட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அதிகாரிகளிடம் குடிமக்கள் நேர்மறையான முறையில் கேள்வி எழுப்பும் இந்த மாற்றம், சமூகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடி வெடிக்குறதுல விஞ்ஞான சோதனை! வாட்டர் பாட்டில் வெடி வெடிக்குறத பாருங்க..... வைரலாகும் வீடியோ!