தீபாவளி வெடியில் மரண விளையாட்டு! 50 சாக்லேட் குண்டுகளின் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளையன்! சில நொடிகளில் வெடித்து சிதறிய.... அதிபயங்கர வீடியோ காட்சி!



viral-chocolate-bomb-blast-video

இளைஞர்கள் சமூக ஊடக புகழைப் பெற சில சமயம் ஆபத்தான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த சமீபத்திய வைரல் சம்பவமும் அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என கூறலாம்.

வெறிச்சோடிய சாலையில் ஆபத்தான முயற்சி

சில நொடிகளில் நடந்த வெடிப்பு இணையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு இளைஞன் வெறிச்சோடிய சாலையின் நடுவில் சுமார் 50க்கும் மேற்பட்ட சாக்லேட் குண்டுகளை வரிசையாக வைக்கிறார். பின்னர், தனது பையில் இருந்து எடுத்த பெட்ரோல் பாட்டிலில் இருந்த முழு பெட்ரோலையும் குண்டுகளின் மீது ஊற்றுகிறார். அவனுடன் இருந்த நண்பர் இந்த முழு நிகழ்வையும் கேமராவில் பதிவு செய்கிறார்.

சில விநாடிகளில் தொடர் வெடிப்புகள்

அதன் பிறகு, எந்த முன்னெச்சரிக்கையுமின்றி அந்த இளைஞன் ஒரு லைட்டரைப் பயன்படுத்தி தீவைத்து உடனே ஓடிவிடுகிறார். சில விநாடிகளில் தீ வேகமாகப் பரவி, தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்து கடும் சத்தத்துடன் புகை மூட்டம் எழுந்தது. அந்த வெடிப்பின் தாக்கம் ஒரு உண்மையான குண்டு வெடித்தது போல் இருந்ததால், வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: எதையும் விட்டுவைக்குறது இல்ல! ஓடும் தண்ணீரில் உடும்பை சுற்றி வளைத்த தெரு நாய்கள்! அய்யோ..என்னா பாடு படுத்துது பாருங்க! அதிர்ச்சி வீடியோ...

மில்லியன் கணக்கான பார்வைகள், கடுமையான விமர்சனங்கள்

mithlesh_motovlogger என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள நிலையில், இதை மில்லியன் கணக்கானோர் பார்த்து வருகின்றனர். பலர் இதனை விரும்பியுள்ளதோடு, சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறது. “இது மிகவும் ஆபத்தான செயல், இப்படிப்பட்ட செயல் உயிருக்கு அபாயம்” என ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “உன் பெற்றோர் உன்னை அடிக்கவில்லையா?” என்று கண்டித்தார்.

இளைஞர்களுக்கான எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் தற்போது இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, இத்தகைய செயல்கள் இளைஞர்களுக்கு ஆபத்தான உத்வேகத்தை தரக்கூடாது என பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புகழைப் பெறும் ஆசை உயிரை ஆபத்தில் ஆக்காமலும், பொறுப்புடன் சமூக ஊடகங்களை பயன்படுத்தவேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது.

 

இதையும் படிங்க: 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!அதில் ஏறி சறுக்கி விளையாடும் குழந்தை! வீடியோ எடுத்த ரசித்த பெற்றோர்...கொந்தளிப்பில் நெட்டிசன்கள்!