Video: அதுவும் ஒரு உயிர் தானே! புத்திசாலி புறா, மனிதாபிமானம் கொண்ட ஆபரேட்டர்! இணையத்தை பிரமிக்க வைத்த வீடியோ...

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைதளங்களில் பல விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் கவனத்தை பெறுகின்றன. குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள், பார்ப்பவர்களுக்கு ரசனையையும் உருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
புத்திசாலியான புறா மற்றும் மனிதாபிமானம் கொண்ட ஆபரேட்டர்
சமீபத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு புத்திசாலி புறா மற்றும் ஒரு ஆபரேட்டரின் மனிதாபிமானமான செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இரண்டு கண்டெய்னர்களை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கும் வேலைக்கு ஒருவன் ஈடுபட்டிருந்தான். அதே நேரத்தில், மேலே அமர்ந்திருந்த ஒரு புறா நகராமல் இருந்தது.
புறாவை காயப்படுத்தாமல் எடுத்த நடவடிக்கை
புறாவை திடீரென விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அந்த ஆபரேட்டர் மிகவும் மெதுவாக கண்டெய்னரை நகர்த்தி, ஒரு சிறிய இடைவெளி விட்டு அமைத்தார். இது புறாவுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. புறா அந்த சிறிய வழியாக வெளியேறிய பிறகே, கண்டெய்னர் முழுமையாக பதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Video: பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு! பாம்பு தப்பிக்க என்னா பண்ணுது பாருங்க! கடைசியில் என்னாச்சுன்னு தெரியுமா? திக் திக் நிமிட காணொளி...
இணையத்தை பிரமிக்க வைத்த வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி, பலரும் அதனை பாராட்டியுள்ளனர். சிலர் ஆபரேட்டரின் மனிதநேயம் குறித்து கருத்து தெரிவிக்க, மற்றவர்கள் புறாவின் புத்திசாலித்தன்மையை புகழ்ந்து வருகின்றனர்.
ஆப்பரேட்டர் அந்த பறவையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தது
சிறப்பு தான்
அங்கே ஒரு வழி இருந்தது அதைவிட சிறப்பு♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/EqwvjEPFZW— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) May 1, 2024
இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? சாக்கடை குழியின் மூடியை திருட முயன்ற வாலிபர்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! வைரல் வீடியோ..