மாடியில் அமர்ந்து யோகா செய்த பெண்! பக்கத்தில் அமர்ந்து யோகா செய்த குரங்கு! அது போஸ்ஸ பாருங்க... வேற லெவல் வீடியோ!



monkey-yoga-viral-video

இன்றைய சமூக ஊடக உலகில் மனிதர்களைத் தாண்டி விலங்குகளின் இயல்பான நடவடிக்கைகளும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. அப்படியான ஒரு வைரல் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ஒரு பெண் வீட்டின் மேல் மாடியில் அமைதியாக யோகா செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு குரங்கு அருகில் வந்து அவளைக் கவனமாகப் பார்த்தது. பெண் ஒரு காலை நேராக மேலே தூக்கி நிலைநிறுத்தியிருந்ததால், அதையே பின்பற்ற முயன்ற குரங்கின் செயலால் அனைவரும் சிரிப்பில் உறைந்தனர்.

வியப்பூட்டும் குரங்கின் நகைச்சுவையான யோகா முயற்சி

பெண் செய்த அதே நிலையில் தன்னைத் தக்கவைக்க குரங்க முயன்ற சம்பவம் அருகிலிருந்த ஒருவர் மொபைலில் பதிவு செய்த 12 விநாடி வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதை @naturelife_ok என்ற பயனர் ட்விட்டரில் பதிவிட்டார்.

இதையும் படிங்க: இப்படி செய்யலாமா? இத எப்படி சாப்பிடுவது! உணவுப் பொருளை கால்களால் மிதித்து.... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் நகைச்சுவை கமெண்ட்களும்

இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். “குரங்கு புதிய யோகா குரு ஆகப் போகுது” என ஒருவர் கமெண்ட் செய்ததோடு, “நாம் ஸ்க்ரோல் செய்ய, குரங்கு fitness inspiration ஆகுது” என இன்னொருவர் எழுதியுள்ளார்.

யோகா உண்மையில் அனைத்து உயிர்களுக்கும் அமைதியும் உடல் சீருடனும் தரும் என்பதை இந்த இனிமையான தருணம் உலகுக்கு நினைவூட்டுவதாய் பலர் பாராட்டி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விளையாடிய குழந்தையை தூக்க முயன்ற கழுகு! அடுத்த நொடியே வளர்ப்பு நாய் செய்த செயலை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!