என்ன ஒரு தில்லாலங்கடி வேலை! Instamart இல் பணத்தை பெற AI மூலம் போலி புகைப்படத்தை உருவாகிய நபர்! வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!



instamart-ai-fake-egg-refund-controversy

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் ஒரு பதிவில், ஆன்லைன் ஷாப்பிங் துறையின் நம்பகத்தன்மை குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. Instamart சேவையில் AI உதவியுடன் ரீஃபண்ட் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த நிகழ்வு, தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை வெளிப்படுத்துகிறது.

AI மூலம் போலி படங்கள் உருவாக்கப்பட்டதா?

ஒரு ‘Instamart’ வாடிக்கையாளர், தான் ஆர்டர் செய்த முட்டைகள் பெரும்பாலும் சீராக இருந்தபோதும், கூடுதல் பணத்தைப் பெற வேண்டுமென்பதற்காக செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி போலியான படங்களை உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு முட்டை மட்டுமே உடைந்திருந்த நிலையில், AI கருவிக்கு “மேலும் உடைந்தது போல சேர்” என்று கட்டளையிட்டு, 20க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்திருப்பது போல காட்சிகளை உருவாக்கியதாக வைரலான பதிவு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: பொது இடத்தில் இளம்பெண் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்! அதுவும் யாருக்கு தெரியுமா? பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க... வைரல் வீடியோ..!!

முழு ரீஃபண்ட் பெற்றதாக குற்றச்சாட்டு

இந்த AI துஷ்பிரயோகம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி, வாடிக்கையாளர் வாடிக்கையாளர் சேவையிலிருந்து முழு ரீஃபண்டையும் பெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பகிர்ந்த நபர், “AI மீது நிறுவனங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல், சரிபார்ப்பு முறைகளை உடனடியாக மாற்ற வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகத்திற்கு புதிய சவால்

இந்தச் சம்பவம், AI மூலம் ஆன்லைன் முறைகேடுகள் செய்யப்படலாம் என்பதற்கான ஒரு தெளிவான உதாரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரீஃபண்ட் செயல்முறை மற்றும் புகார் சரிபார்ப்பு முறைகளை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியுடன் வரும் இத்தகைய மோசடி முயற்சிகளை எதிர்கொள்வதற்காக, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புதிய பாதுகாப்பு முறைகளை ஏற்க வேண்டிய அவசியம் மேலும் வலியுறுத்தப்படுகிறது.