பொண்ணு ஒன்னு நினச்சா அத முடிக்காம விடாதுல்ல! துணிச்சலாக பேருந்தை ஒட்டி சென்ற இளம் பெண்! இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ....



himachal-woman-bus-driver-video-viral

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பல துறைகளில் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக பேருந்து ஓட்டுநர் பணியில் தற்போது பெண்கள் தைரியமாக முன்னேறி வருவது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேஹா தாகூரின் வைரல் வீடியோ

இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நேஹா தாகூர் என்ற பெண் தன்னம்பிக்கையுடன் பேருந்தை ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதில் சவால்கள் இருப்பினும், நேஹா தாகூர் தனது திறமையால் பேருந்தை நெரிசல் மிக்க சாலைகளில் சீராக இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பு

nehuthakur2529 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் அவரை பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இது பெண்களின் தைரியம் மற்றும் தொழில் வாய்ப்புகளில் அவர்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இதையும் படிங்க: கணவனுக்கு என்ன ஒரு தந்திரம்! திடீரென மாயமான 500 ரூபாய் பணம்! கணவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! தானாகவே பணத்தை எடுத்து கொடுத்த மனைவி! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ...

இவ்வாறு பெண்கள் தைரியம் மற்றும் திறமையுடன் முன்னேறும் காட்சி, சமுதாயத்தில் புதிய முன்மாதிரியை உருவாக்கி வருகிறது. நேஹா தாகூரின் சாதனை பெண்கள் எந்தத் துறையிலும் பினங்காமல் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

 

இதையும் படிங்க: பாம்பை பார்த்து பயந்து நடுங்கி போன 2 சிங்கங்கள்! ஒரே பார்வையில் ஒதுக்கி ஓட விட்டுட்டு! அடுத்து என்ன வருதுன்னு நீங்களே பாருங்க! வைரல் வீடியோ...