புள்ள முக்கியமா இல்ல போட்டோ முக்கியமா? சிங்கத்தின் மீது உட்காரவைத்து போட்டோ எடுக்க முயன்ற தந்தை! நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பதறவைக்கும் வீடியோ காட்சி...



father-makes-son-sit-on-lion-for-photo-viral-video

சிங்கத்தின் மீது குழந்தையை வைத்து புகைப்படம் எடுக்க முயன்ற தந்தை

சமூக வலைதளங்களில் அன்றாடம் பகிரப்படும் வைரல் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளை வைத்து வேடிக்கையாக காட்சிப்படுத்தும் காட்சிகள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

சிங்கத்தின் மீது புகைப்படம் எடுக்க முயற்சி

அந்த வகையில், ஒரு நபர் தனது மகனை சிங்கத்தின் மீது உட்கார வைத்து புகைப்படம் எடுக்க முயன்ற சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கத்தின் மீது அமர  வைத்த இந்த முயற்சியில் குழந்தை பயந்து கதறி அழுது எதிர்வினை காட்டியது.

சிங்கம் காட்டிய எச்சரிக்கை நடத்தை

குழந்தையின் பயத்தை பொருட்படுத்தாமல், அப்பா தொடர்ந்தும் கட்டாயப்படுத்த முயன்றார். இதனால் சிங்கம் எரிச்சலுடன் திரும்பி தாக்கும் போல் நடந்தது. அப்போது நபர் தன்னுடைய மகனை தூக்கிக் கொண்டு தப்பி ஓடியார்.

இதையும் படிங்க: Video: காரின் அலாரத்திற்கு அழகாக நடனமாடும் குழந்தை! மனதளவில் சந்தோஷபடுத்தும் வீடியோ....

நெட்டிசன்களின் கடும் விமர்சனம்

இந்தக் காட்சி பதிவான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த செயலுக்கு எதிராக விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.

ஒரு பயனர், “தனது மகனை தானே ஆபத்தில் தள்ளுகிறார்” என கடுமையாகக் கண்டித்தார். இன்னொரு நபர் “அவரை சிறையில் அடைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: டேய் என்னடா பன்ற..அந்தப் பையன் பாவம்! குட்டி பையனின் குறுப்புத்தனம்! மனதை மகிழ்விக்கும் கியூட் வீடியோ காட்சி!!