நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
அட அட....போக்குவரத்தை சரிசெய்யும் மனித வடிவிலான ரோபோ! ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ...
உலகளவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய அதிசயங்களை உருவாக்கி வருகிறது. அதன் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக, மனித வடிவிலான ரோபோ சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மனித வடிவிலான ரோபோவின் பணி
இணையத்தில் வைரலாகிய வீடியோவில், சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மனித வடிவிலான ரோபோவை காணலாம். வாகனங்களை சரியான பாதையில் செல்ல வழிநடத்துவது, பொதுமக்களை பாதுகாப்பாக சாலையை கடக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளை அது மனித காவலரைப் போல் திறம்பட செய்துள்ளது.
தொழில்நுட்பத்தின் புதிய நிலை
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் உணவகங்கள், தொழிற்சாலைகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவின் சாலைகளில் போக்குவரத்து காவலர் பணி செய்யும் இந்த ரோபோ, எதிர்காலத்தில் மனிதர்களின் பங்கினை எவ்வளவு அளவுக்கு மாற்றப்போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: நம்பவே முடியல.... மரத்தில் படமெடுத்து அமர்ந்திருந்த இச்சாதாரி நாகினி! இணையத்தில் தீயாய் வைரலாகும் காணொளி!
நெட்டிசன்களின் கருத்துகள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, பல்வேறு எதிர்வினைகளை தூண்டியுள்ளது. “இன்னும் எத்தனை வேலைகளை ரோபோக்கள் கைப்பற்றப்போகின்றன?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, “போக்குவரத்து காவலர்களின் வேலை வாய்ப்புகள் ஆபத்தில் உள்ளதோ?” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்தியையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் வெளிப்படுத்தும் இந்த வைரல் வீடியோ உலகம் முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
2. Robots ya trabajan como policías de tráficopic.twitter.com/SIZxwsptrK
— IVAN | IA (@ivnways) August 5, 2025
இதையும் படிங்க: சாவின் விளிப்புக்கே சென்று வெள்ளத்தில் போராடி! உத்தரகாண்ட் கடும் வெள்ளத்தில் உயிர் பிழைத்த நபரின் வீடியோ காட்சி....