குழந்தையின் நம்பிக்கை வீண் போகல... கடவுளே..! "பிளீஸ் கதவைத் திற, பயமா இருக்கு" லிப்டுக்குள் சிக்கிக்கொண்டு வேண்டிய சிறுவன்! அடுத்த நொடி நடந்த அதிசயம்!
நம்பிக்கையும் அப்பாவித்தனமும் நிறைந்த தருணங்கள் சில நேரங்களில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொடும் சக்தி கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு சிறுவனின் லிஃப்டில் நிகழ்ந்த சம்பவம் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
லிஃப்டில் சிக்கிய சிறுவனின் மனதை உருக்கும் தருணம்
சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், லிஃப்ட் திடீரென நின்றபோது அதில் சிக்கிய சிறுவன் பயப்படாமல் “கடவுளே, தயவுசெய்து கதவை திற. எனக்கு பயமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் எனத் தெரியும்” என பிரார்த்தனை செய்வது தெரிகிறது.
இதையும் படிங்க: எந்த நிலைமையில் நிக்கிறான் பாருங்க! தேசிய கீதம் ஒலிக்கும்போது சிலைபோல் உறைந்து நின்ற மாணவர்! வைரலாகும் மெய்சிலிர்க்கும் வீடியோ..
அதிர்ச்சியை மாற்றிய நம்பிக்கையின் சக்தி
சில நொடிகள் கழித்து எதிர்பாராதவிதமாக லிஃப்ட் கதவு திறந்தவுடன், சிறுவன் பாதுகாப்பாக வெளியே வந்தான். அந்த நொடியில் உருவான உணர்வு பலரின் மனதையும் தொட, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரவி வருகிறது.
பாராட்டுகளால் நிரம்பிய சமூக ஊடகங்கள்
இந்த குறுகிய வீடியோ அப்பாவித்த தன்மையும், அச்சத்தின் மத்தியில் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகப் பாராட்டப்பட்டது. பெரியவர்கள் பலமுறை மறந்துவிடும் நம்பிக்கை சக்தியை இந்தக் குழந்தை ஒரு கணத்தில் நினைவூட்டியது என பலர் கருத்து தெரிவித்தனர்.
சிறுவனின் மன வலிமை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகம் முழுவதும் மனித உணர்வின் அழகை மீண்டும் நினைவூட்டியுள்ளதென கூறப்படுகிறது.
A little boy got stuck in an elevator and softly prayed, “Lord, please open the door. I’m a little scared, but I know You’re with me.” 🙏
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) October 27, 2025
Such innocent faith, it truly melts your hearthttps://t.co/ZJZ3a5U1zW
இதையும் படிங்க: நாய்களுக்கு ஆபத்தை உணரும் உணர்வு! தெய்வம் போல உடனே வந்து காப்பாத்துன நன்றியுள்ள நாய் ! ஷாக் வீடியோ.....