செம மாஸ்.. அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் நடிகர் சிவகார்த்திகேயன்.! மதராஸி மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!!



actor-sivakarthikeyan-madarasi-movie-action-scene-makin

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 23 வது படமாகும். இந்த படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மதராஸி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலம்பல பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில் தற்போது படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்சன் காட்சிகளில் வேற லெவலில்  மிரள வைத்துள்ளார். மேலும் இந்த மேக்கிங் வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: அட.. வேற லெவல்தான்.! சிவகார்த்திகேயனின் 25வது பட டைட்டில் இதுவா.! வெளிவந்த தகவல்!!

இதையும் படிங்க: பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!