'ஜல்லிக்கட்டு காளை'யாக களமிறங்கிய நாய்.! குஷியான வீரர்கள்.!

'ஜல்லிக்கட்டு காளை'யாக களமிறங்கிய நாய்.! குஷியான வீரர்கள்.!


a-dogs-attempt-to-participate-in-jallikattu

தை மாதம் முதல் நாளன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவையாகும்.

jallikattu

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக தொடங்கியது. இப்போட்டியில் 1000 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களம் இறங்க டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீறிப்பாய்ந்த காளைகள் மைதானத்தை அழகுபடுத்தின. இருபுறமும் நின்றிருந்த வீரர்கள் அவற்றை தழுவ முற்பட, போட்டி களைக்கட்டத் தொடங்கியது. 

அந்தப் போட்டியில் மூன்றாவது சுற்று நடக்க துவங்கயில்,  ஒரு நாய் மைதானத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தது. வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட போதிலும் எதற்கும் அசராமல் அங்கேயே அமர்ந்திருந்தது. 

jallikattu

சிறிது நேரத்திற்குப் பின், அந்த நாய் வேகமாக மைதானத்திற்குள் பாய்ந்து, மாடுகள் செய்வது போலவே மண்ணை முட்டி ஆக்ரோஷமாக ஓடித்திரிந்தது. அந்த செய்கை, "என்னையும் இந்த போட்டியில் சேர்த்துக்கோங்க! முடிஞ்சா என்னை வந்து அடக்குங்க!" என்பது போல் அழகாக இருந்தது. அந்த நாய் செய்த சேட்டையை அங்கிருந்த அனைவரும் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.