சினிமா பிக்பாஸ் UC Special

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ரசிகர்கள் கமல்ஹாசனிடம் ஏமாற்றமடைந்தது என்ன தெரியுமா?

Summary:

bigboss fans feeling about kamal


விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். 

இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும். இந்நிலையில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். 

பிக்பாஸ் சீசன் 3 விரைவில் முடிவடைய உள்ளதால் போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்பாஸ் தொடர்ந்து விருந்தினர்களை மீண்டும் உள்ளே அனுப்பி வருகின்றனர். அதன்படி நேற்று வனிதா, சாக்‌ஷி, கஸ்தூரி, சேரன், அபிராமி ஆகியோர் விருந்தினர்களாக உள்ளே சென்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் இரண்டு பிக்பாஸ் சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால்  பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறி வருகின்றனர். முதல் இரண்டு சீசன்களிலும் கமல்ஹாசன் அதிகமாக உள்ளிறங்கி தொகுத்து வழங்கினார். சில நேரங்களில் கோவத்தில் அவரது சட்டையை அகற்றி தூக்கி வீசும் நிகழ்வு கூட நடந்தது.

ஆனால் இந்த சீசனில் கமல் சிம்பிளாக, சாதாரண தொகுப்பாளரை போலவே செயல்படுகிறார் என ரசிகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முதல் இரண்டு சீசன்களிலும் கமல் வரும் எபிசோட் என்றலே ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு காரம் சாரமாக நிகழ்ச்சிகள் போனது. ஆனால் இந்த மூன்றாவது சீசன் முந்தய இரண்டு சீசன்களை போல ஆர்வமாக இல்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனாலும் கமல்ஹாசனுக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கின்றோம் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Advertisement