சினிமா UC Special

நடிகர் விஜயின் கடைசி ஐந்து வெற்றி திரைப்படங்கள் என்ன தெரியுமா? கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

Summary:

actor vijay 5 hit movie


சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 63 படமான ‘பிகில் ‘படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த படத்தின் வெறித்தனம் பாடல், சிங்க பெண்ணே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து "தளபதி 64” படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். இந்த தளபதி 64 படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் அடுத்தடுத்த இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கடைசியாக தளபதி விஜய் நடித்து  சூப்பர் ஹிட்டான ஐந்து படங்களை பற்றி விஜய் ரசிகர்கள் பிரபலமாக பேசிவருகின்றனர். 

விஜய் ரசிகர்கள் கொண்டாடும் கடைசி ஐந்து வெற்றி படங்கள்:

துப்பாக்கி - 2012 : 

                      துப்பாக்கி படத்தில் தளபதி விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.
 
ஜில்லா - 2014 :
                       ஜில்லா படத்தில் தளபதி விஜய் உடன் மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.
 
கத்தி - 2014 :
                    கத்தி படத்தில் தளபதி விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகியது இந்த திரைப்படம். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசைமைத்தார். 

தெறி - 2016 :
                      தெறி படத்தில் தளபதி விஜய் உடன் ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்தார்.

மெர்சல் - 2017 :
                      மெர்சல் படத்தில் தளபதி விஜய், எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்தனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்ற்கு  ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார்.


Advertisement