மக்களே உஷார்! உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் மொத்தமும் பறிபோய்விடும்!. மத்திய குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை!.

மக்களே உஷார்! உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் மொத்தமும் பறிபோய்விடும்!. மத்திய குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை!.


warning to smartphone users


டெக்னாலஜி வளர்ந்தவுடன் பொதுமக்கள் பலர் வங்கிகளுக்கு செல்வதில்லை. பணப்பரிவர்த்தனை அனைத்தும் இணையத்தின் வாயிலாகவே நடைபெறுகின்றன. ஸ்மார்ட்போன் வந்தவுடன் பல செயலிகள் வங்கி சேவைகளுக்காக வந்துவிட்டன. 

இந்தநிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே , பேடிஎம் , போன் பே , பே சாப் மற்றும் அரசு , தனியார் வங்கிகளின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துபவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்க நேரிடும்.

எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் அவர்களது ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு வங்கி கணக்கை முடக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் பணம்  திருடுப் போக வாய்ப்புகள் உள்ளது.

smart phone

உங்களிடம் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது புகார் அளியுங்கள் உடனடியாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் கூறுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பது அன்மை காலமாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

உதாரணமாகக் கூகுள் பே என்ற என்ற செயலி மூலம் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றவருக்கு நொடிகளில் அனுப்பி விடலாம். இதற்கு வங்கி கணக்கில் உள்ள மொபைல் எண் கட்டாயம். அந்த செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரிவார்ட்ஸும் கொடுக்கப்படுகிறது.

smart phone

இதுபோன்ற செயலிகளை ஸ்மர்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யும் பொழுது, அது கேட்கக்கூடிய வங்கி எண் , ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை முதலில் நாம் கொடுக்கும்பொழுது நமது தகவல்கள் அனைத்தும் செயலிகளில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் தொலைந்து விட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அந்த வங்கி செயலி மூலம் எளிதாக உங்கள் பணத்தை எடுத்துவிட முடியும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறுகின்றனர்.

எனவே வங்கி தொடர்பாக ஸ்மார்ட்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும். வங்கிக் கணக்கு தொடர்பான புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.