மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
கடந்த மாதங்களை விட ஸ்பேம் அழைப்புகள் தேசிய அளவில் குறைவு; டிராய் அறிவிப்பு..
கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், ஸ்பேம் தொடர்பான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவவை, அக்டோபர் மாதத்தில் 1.51 இலட்சம் அளவில் குறைந்துவிட்டதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற விஷயங்களை கட்டுப்படுத்தி வரும் டிராய், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 1.63 இலட்சம் ஸ்பேம் சார்ந்த அழைப்புகள் பெறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் அவை 20 விழுக்காடு என்ற அளவில் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து அதன் வீழ்ச்சி தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: ரூ.1 கோடி லோனை ஒரே மாதத்தில் செலுத்திய வாடிக்கையாளர்; வாயைப்பிளந்த வங்கி மேலாளர்.. எப்படி சாத்தியம்?
டிராய் அறிவிப்பு
வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் போன்றவை மூலமாக மோசடி செயல்கள் நடைபெறும் நிலையில், அதனை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்த காரணமாக அமைந்து இருக்கிறது என டிராய் தெரிவித்துள்ளது.
செல்போன் நிறுவனங்கள் வாயிலாக சமீபத்தில் ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் வாயிலாக ஸ்பேம் அழைப்புகள் தொடர்பாக மக்களும் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஸ்பேம் என கவனிக்கப்படும் செல்போன் நம்பர்கள் நேரடியாக பிளாக் செய்யப்பட்டு அழைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உதயமானது "டெக் சூப்பர் ஸ்டார்" யூடியூப் சேனல் - புது ஆபிஸ் ஓபன் பண்ணியாச்சே.. இனி எல்லாம் மாஸ் தான்.!