வாட்ஸாப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி! உடனே படிங்க!

வாட்ஸாப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி! உடனே படிங்க!



shocking-news-for-whatsapp-users-ad-is-coming-soon

செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வாட்சப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முன்பெல்லாம் செய்தி அனுப்புவதற்காகவே ரீசார்ஜ் செய்த காலம் மாறி தற்போது வாட்சப் மூலம் கட்டணமின்றி செய்தி, வீடியோ, போட்டோ என நண்பர்களுடன் அனைத்தையும் எளிதில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

வாட்சப் நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு Facebook நிறுவனம் கைப்பற்றியது. வாட்சப் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது Facebook நிறுவனம். ஸ்டேட்டஸ் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது.

Whatsapp updates

இந்த ஸ்டேட்டஸ் என்ற வசதி மூலம் வாட்சப் பயனாளர்கள் தங்களது புகைப்படம், வீடியோ போன்றவற்றை பதிவேற்ற முடியும். 30 வினாடிகள் வரை விடீயோக்களை பதிவேற்ற முடியும். பதிவேற்றிய பதிவு 24 மணி நேரம் கழித்து தானாகவே அழிந்துவிடும்.

இந்நிலையில் வாட்சப் மூலம் Facebook நிறுவனத்திற்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில் இந்த ஸ்டேட்டஸ் என்ற வசதியில் விளம்பரங்களை ஒளிபரப்ப உள்ளது வாட்சப் நிறுவனம். ஒவ்வொரு ஸ்டேட்டஸ் பிளே ஆகும்போது அதன் இடையில் விளம்பரம் காட்டப்பட்ட உள்ளது. இதன்மூலம் தொழில் முனைவோர் தங்களது விளம்பரங்களை வாட்சப் பயனாளர்களுக்கு காட்ட முடியும்.

இந்த வசதியானது சில காலங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வசதி வாட்ஸப்பிலும் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. இதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலையே இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.