ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
சாம்சங் பிரியர்களே ரெடியா?.. மொபைலை லேப்டாப்பாக மாற்றலாம்.. Galaxy Z TriFold ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
உலகின் முதல் மூன்று மடிப்பு திரையுடன் சாம்சங் Galaxy Z TriFold ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய Galaxy Z TriFold ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மாடல் 3 மடிப்பு டிஸ்ப்ளே வடிவமைப்பை பெற்றுள்ளதால் சாதாரண ஸ்மார்ட்போனிலிருந்து 10 இன்ச் டேப்லெட் திரை அளவு வரை விரிவடையும் வசதியை கொண்டுள்ளது. இது ஒரே சாதனத்தில் மொபைல் மற்றும் டேப்லெட் ஆகிய இரு உபயோகங்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Galaxy Z TriFold ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
Galaxy Z TriFold ஸ்மார்ட்போன் இரண்டு வகை டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே நாம் எப்போதும் உபயோகிப்பது போன்ற நிலைய ஸ்மார்போன் திரையை பிரதிபலிக்கிறது. அதனை முழுமையாக திறக்கும்போது 10 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X பிரதான திரையை வழங்குகிறது. இரண்டு திரைகளும் 1Hz முதல் 120Hz புதுப்பிப்பு திறனை கொண்டுள்ளது. சாதாரண ஸ்மார்ட்போன் போல இல்லாமல் வெளியில் செல்லும்போதும் உபயோகிக்கும் வகையில் 2600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் என்ன?.. விலை விபரம் இதோ.!
We don’t just follow what’s next. We shape it.
— Samsung Singapore (@SamsungSG) December 2, 2025
Introducing the Galaxy Z TriFold.
Coming to Singapore soon, exclusively on https://t.co/mV7xyuMHbf.
Stay tuned for more. pic.twitter.com/5tmWURA2dk
கேமரா விபரம்:
இந்த மாடலில் 200MP OIS வைடு கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x ஸ்பேஸ் ஜூம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இரண்டு தனி 10MP செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன் 8 Elite processor, 16GB RAM மற்றும் 512GB அல்லது 1TB மெமரி ஆப்ஷன்ஸ் உள்ளது.
பேட்டரி மற்றும் விலை விபரம்:
பேட்டரி திறனை பொறுத்தவரையில் 5600mAh பேட்டரி, 45W ஒயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆதரவுடன் வருகிறது. 512GB மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,19,235 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 12ஆம் தேதி கொரியாவில் வெளியிடப்பட்டு, பின்னர் சீனா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் அறிமுகமாகும் என சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.