ராணிப்பேட்டை: மோட்டோரோலா போன் புக் செய்தவருக்கு டவ் சோப் டெலிவரி.. பிளிப்கார்ட் ஆர்டர் பரிதாபங்கள்..!



Ranipet Youth Get Dove Soap in Motorola Parcel Worth Rs 25000 by EMI 

 

இஎம்ஐ-ல் லோன் பெற்று ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களை குறிவைத்து நடக்கும் மோசடி தொடருகிறது. 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் யோகேஷ் என்பவர், தனக்கு செல்போன் வேண்டி பிளிப்கார்ட் தளத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள, மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஸ்கைப் பயனர்களுக்கு ஷாக் செய்தி வெளியிட்ட மைக்ரோசாப்ட்.. விபரம் உள்ளே.!

போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இஎம்ஐ முறையில் ஆர்டர் செய்யப்பட்டுள்ள செல்போனை வாங்கியவர், அதில் ஏதேனும் மோசடி நடந்துவிடுமோ என்ற அச்சத்தில், வீடியோ எடுத்தபடி பார்சலை பிரித்தார். 

Technology

நம்பிக்கையில் காத்திருப்பு

அப்போது, அவர் பயந்தபடி பார்சலில் செல்போனுக்கு பதில் டவ் சோப் அனுப்பி வைக்கப்பட்டது அம்பலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்து, செல்போன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். 

ஆன்லைன் ஆர்டர் மோசடி அதிகம் நடக்கும் நிலையில், சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒருவரிடமும் இதேபோல இஎம்ஐ முறையில் பெறப்பட்ட பொருள் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்கைப் பயனர்களுக்கு ஷாக் செய்தி வெளியிட்ட மைக்ரோசாப்ட்.. விபரம் உள்ளே.!