லைப் ஸ்டைல் டெக்னாலஜி

உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள இந்த வசதியை கவனித்துள்ளீர்களா! இனி நீங்கள் டைப் செய்ய தேவையில்லை

Summary:

new feature for using mic to type whatsapp messages

வாட்ஸ் அப்பில் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ்களை விரல்களை கொண்டு டைப் செய்வதற்கு பதிலாக வாய்ஸ் மூலமே டைப் செய்து அனுப்பும் புதிய வசதியை வாட்சப் தனது பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதற்கு என்று தனியாக ஒரு மைக் பட்டன் ஏற்கனவே இருந்து வருகிறது. இதன்மூலம் ஆடியோ வடிவில் நாம் மெசேஜ் அனுப்பலாம். இப்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ்களை டைப் செய்வதற்கென்றே வாட்சப் கீ போர்டில் பிரத்தியேகமாக மைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது வாட்சப். இதன் மூலம் நாம் அனுப்ப வேண்டிய டெக்ஸ்ட் மெசேஜ்களை விரல்களை கொண்டு டைப் செய்வதற்கு பதிலாக குரல்களை வைத்து டைப் செய்யலாம்.

இந்த வாய்ஸ் டைப்பிங் வசதியானது ஏற்கனவே கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் சிரி போன்ற செயலிகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதியானது இப்பொழுது வாட்ஸ்அப்பில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என அணைத்து பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வசதியை பெற ஒருவர் வாட்ஸ் அப்பில் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் அவருடைய மெசேஜ் விண்டோவை ஓப்பன் செய்து வழக்கம்போல டைப் செய்வதற்கு செய்ய கிளிக் செய்ய வேண்டும். அப்பொழுது அங்கு தோன்றும் கீபோர்டில் ஒரு சிறிய வடிவிலான மைக் இருப்பதை பார்க்கலாம். அப்போது அந்த மைக்கை கிளிக் செய்துவிட்டு நாம் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை பேச வேண்டும். அந்த மெசேஜ்கள் அப்படியே எழுத்து வடிவில் அங்கு டைப் செய்யப்படும். பின்னர் அதனை அனுப்பலாம்.


Advertisement