செல்போனில் பேசினாலே இவ்வளவு ஆபத்தா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!mobile-phone-signal-frequency-health-issue

 

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலமாக தொலைத்தொடர்பு சேவை என்பது மிகப்பெரிய அளவில் மக்களிடையே பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியா தற்போது வரை 5ஜி தொழில்நுட்பத்தில் களமிறங்கி அதன் தொடக்க கட்டத்தில் இருக்கிறது. பலரும் 5 ஜி சேவையை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

ஜப்பானில் அறிமுகமான 6 ஜி

அதே வேளையில், ஜப்பான் நாட்டில் 6ஜி தொலைதொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்படும் பணிகளானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாரத்திற்கு 30 நிமிடம் அல்லது அதற்கு மேல் நாம் செல்போனில் பேசி வரும் பட்சத்தில், உயர் ரத்த அழுத்த பிரச்சனை 12 விழுக்காடு அதிகமாகும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: வெறும் 499ரூபாயில் போர்டபிள் மினி ஏசி.. கரண்ட் பில் பற்றி கவலை வேண்டாம்..

Technology

செல்போன் பேசினாலே ஆபத்து

வாரத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், இந்த பிரச்சனை 25 விழுக்காடு அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. தோள்பட்டை வலி, கைகளில் தசை வலி, கழுத்து வலி, தலைவலி, செவித்திறன் பிரச்சனையும் ஏற்படும். அதே போல, போன்கள் பயன்படுத்துவது மட்டுமல்லாது, ஃபோன்களால் வெளியிடப்படும் ரேடியோ அலைவரிசையே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: உங்கள் ஸ்மார்ட் போன் நீண்ட நாட்கள் உழைக்கணுமா.? இதை பண்ணுங்க போதும்.!?