வெறும் 499ரூபாயில் போர்டபிள் மினி ஏசி.. கரண்ட் பில் பற்றி கவலை வேண்டாம்..



News about portable mini ac

கோடை வெயிலின் தாக்கம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வெயிலால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். காலகட்டத்திற்கு ஏற்ப நம் வீடுகளில் பல நவீனமயமான பொருட்கள் வந்துவிட்டன. இதில் குறிப்பாக ஏசி இல்லாத வீடுகளே தற்போது அதிகமாக காண முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

இவ்வாறு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பல முன்னணி நிறுவனங்களில் ஏசி விற்பனை அமோகமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் பலராலும் ஏசி வாங்க முடியாத சூழ்நிலை இருப்பதால் பல நிறுவனங்கள் பட்ஜெட் பிரண்ட்லி ஏசியை அறிமுகம் செய்துள்ளனர். விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் இந்த போர்ட்டபிள் ஏசியை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?!

குறிப்பாக ₹499 முதல் 2000 வரை இந்த போர்ட்டபிள் ஏசியின் விலை இருந்து வருகிறது. இந்த மினி ஏசி வாங்கும் போது மின்சாரமும் சிக்கனமாகும். இந்த மினி ஏசியை யுஎஸ்பி பேட்டரி கொண்டு எளிதாக சார்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போர்ட்டபிள் வகையை சார்ந்தது என்பதால் வீட்டின் எந்த அறையிலும், காரினுள் கூட இதை எளிதாக வைத்துக் கொள்ளலாம்.

மினி ஏர் கூலரின் வகைகள்

AOXITO மினி கூலர் - யு எஸ் பி மற்றும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த மினி கூலர் 499 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் இது பத்து மணி நேரம் வரை இயங்கக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது.
NTMY மினி ஏர் கூலர்  - தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி இந்த மினி ஏர் கூலர் உபயோகப்படுத்தலாம். 12 மணி நேரம் வரை இயங்கக்கூடிய இது 1187 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
SKYUP மினி ஏர் கூலர் - 1848 ரூபாய்க்கு கிடைக்க கூடிய இந்த மினி ஏசி 600MI வாட்டர் டேங்க், 7 வகையான லைட் மூட்ஸ் போன்ற பல வகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதைப் போன்ற பல வகையான மினி ஏர் கூலர் கிடைப்பதால் பலதரப்பட்ட மக்களும் இதை வாங்கி பயனடையலாம்.

இதையும் படிங்க: "ஆயுளை அதிகப்படுத்தும் பழைய சோறு" பழைய சோறு சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படுகிறதா.!?