மகிழ்ச்சி! 100 GB இலவசம், ரூ. 2200 கேஸ்பேக்! ஜியோ வழங்கும் அதிரடி ஆப்பர்.! - TamilSpark
TamilSpark Logo
லைப் ஸ்டைல் டெக்னாலஜி Offers

மகிழ்ச்சி! 100 GB இலவசம், ரூ. 2200 கேஸ்பேக்! ஜியோ வழங்கும் அதிரடி ஆப்பர்.!

ஜியோ நிறுவனம் தொலைபேசி துறைக்குள் காலடி வைத்ததில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து அணைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ நிறுவனம். மேலும் அவ்வப்போது புது புது ஆபர்களையும் கொடுத்து மக்களை மேலும் குஷி படுத்தி வருகிறது.

அந்த வகையில் 100 GB இலவச டேட்டா மற்றும் 2,200 கேஷ் பேக்கும் அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது, தொலைபேசி சந்தையில் புரட்சியை ஏற்படுத்திவரும் ரெட்மி  நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஜியோ நிறுவனம். அந்த வகையில் ரெட்மி கோ மாடல் தொலைபேசி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

5000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ரெட்மி கோ தொலைபேசியானது புதிதாக தொலைபேசி வாங்கும் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் மிகவும் பயனுள்ள தொலைபேசியாக அமையும்.

ரெட்மி கோ பயனாளர்களுக்கு இந்த சலுகையையே வழங்குகிறது ஜியோ. ரெட்மி கோ வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 199 அல்லது 299 கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த சலுகையை இலவசமாக பெறமுடியும்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo