லைப் ஸ்டைல் டெக்னாலஜி

ஜியோவில் அசத்தலான திட்டம்! வெறும் 11 ரூபாய்க்கு 4G டேட்டா! முழு விவரம்!

Summary:

jio-4g-data-plan-at-rs-11-everything-to-know

ஜியோவின் வருகையால் ஆட்டம் கண்டுள்ளது தொலைபேசி நிறுவனங்கள். ஜியோவின் போட்டியை தாங்க முடியாமல் Aircel நிறுவனம் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. தற்போது BSNL நிறுவனமும் சந்தேகத்தில் உள்ளது. தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்த Airtel நிறுவனமும், Vodafone நிறுவனமும் கடும் முயற்சியில் உள்ளது.

இந்நிலையில் குறைந்த விலையில் டேட்டா, இலவச போன் கால், SMS என அனைத்தையும் இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளது ஜியோ நிறுவனம். 142 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1.5 GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது. 399 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு 126 GB , அதவாது ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது.

ஒரே நாளில் நீங்கள் 1.5 GB டேட்டாவை முடித்துவிட்டால் உங்கள் இணைய வேகம் 64 kb யாக குறைக்கப்படும். உங்களால் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த முடியும். ஆனால் உங்கள் இணைய வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வது? எப்படி அதிவேக டேட்டாவை பயன்படுத்துவது?

கவலைய விடுங்க. அதற்கான எளிய வழிமுறைகள் கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி

1 . 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 400 MB 4G அதிவேக டேட்டா தரப்படும். மீண்டும் நீங்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்தலாம்.

2 . 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் 1 GB க்கான 4G அதிவேக டேட்டா தரப்படும்.

3 . இதுவே 51 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3GB 4G டேட்டா உங்களுக்கு தரப்படும். மீண்டும் நீங்கள் அதிவேக இணையத்தை 3GB வரை பயன்படுத்தலாம்.

4 . 101 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் 6GB அளவிலான 4G அதிவேக டேட்டா உங்களுக்கு வழங்கப்படும்.

மேலே வழங்கப்படும் 4 விதமான டேட்டாக்களும் உங்கள் தற்போதைய பிளான் முடியும் வரை நீங்கள் சேமித்துவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


Advertisement