எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
அசத்தல் Update.. இன்ஸ்டாவில் ஆபாச படங்களை இனி மெசேஜில் அனுப்பினாலும் பார்க்க முடியாது..!
சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து அதில் நமக்கு தேவையில்லாத தகவல்களும் கிடைக்கப் பெறுகிறது. இதில், நமது முகநூல், இன்ஸ்டாகிராம் உட்பட நேரச்செலவு செயலிகளில் மெசேஜ் வாயிலாக மர்ம ஆசாமிகள் ஆபாச படங்களை அனுப்புவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட செயலிகள் நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்க முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை பிளாக் செய்வதற்கு சிறப்பு வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Nude Protection அமைப்பு மூலமாக இன்பாக்ஸுக்கு வரும் புகைப்படங்கள் தானாகவே மறைக்கப்பட்டு விடும். அதனை பார்க்கலாமா? வேண்டாமா? என்பதை பயனர்கள் கிளிக் செய்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.