வாட்சப் குரூப்பில் ஒருவருக்கு தனியாக ரிப்ளை செய்வது எப்படி? புதிய அப்டேட்டின் வழிமுறை

வாட்சப் குரூப்பில் ஒருவருக்கு தனியாக ரிப்ளை செய்வது எப்படி? புதிய அப்டேட்டின் வழிமுறை


how-to-send-private-reply-for-a-group-chat

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது குரூப் சாட் செய்துகொண்டிருக்கும்போது ஒரு நபர் அனுப்பிய மெசேஜ் குறித்து அனுப்பிய நபருக்கு மட்டும் தனியாக ரிப்ளை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியானது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Whatsapp

ஐ.ஓ.எஸ் 2.19.11 என்ற வெர்சனில் வெளியாகி இருக்கும் புது அப்டேட்டின் படி, நீங்கள் க்ரூப் சாட் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது குறுஞ்செய்திக்கு தனியாக பதில் அனுப்ப விரும்பினால், ப்ரைவேட் சாட் மூலமாக தனியாக பதில் அனுப்பிக் கொள்ளலாம். இதே அப்டேட்டானது ஆண்ட்ராய்டு 2.18.380  வெர்சனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்களின் நண்பர்கள் யாராவது அனுப்பியிருக்கும் மெசேஜ்ஜுக்கு பதில் அனுப்ப விரும்பினால், அந்த மெசேஜ்ஜை லாங் பிரஸ் செய்யுங்கள். லாங் பிரஸ் செய்தால் ஐ.ஓ.எஸ்ல் பாப் அப் மெனு உருவாகும். ஆண்ட்ராய்டு போன்களில் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், மோர் ஆப்சனில் நீங்கள் ரிப்ளே ப்ரைவேட்லி என்ற ஆப்சனை தேர்வு செய்து அந்த மெசேஜ்ஜிற்கான தனிப்பட்ட கருத்தினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.