மொபைல் சார்ஜ் போட போறிங்களா? இதெல்லாம் சரியா இருக்கானு பாத்துட்டு அப்புறம் சார்ஜ் போடுங்க!



How to charge smart phone in safest way

இன்றைய காலத்தில் போனின் தேவை அனைவருக்கும் அவசியமாக உள்ளது. குழந்தைங்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பொதுவாக அணைத்து ஸ்மார்ட் போன்களிலும் பிரச்சனையாக இருப்பது சார்ஜ் தான். சில போன்கள் சார்ஜ் போடும்போதே வெடித்து விபத்து ஏற்படுவதாக கேள்விப்பட்டிருப்போம். அதற்கு முக்கிய காரணம் நாம் சரியான முறையில் அதை கையாலாதுதான்.

சரி வாங்க சரியான முறையில் அவற்றை எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.

பொதுவாக இன்று நாம் அனைவரும் போன் உடைந்துவிடாமல் இருக்க போனிற்கு கவர் உபயோகிக்கிறோம். தொலைபேசியை சார்ஜில் போடும்போது கவரை கழட்டிவிட்டு போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் சார்ஜ் போடும்போது தொலைபேசி சூடாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதே போன்று சார்ஜ் போடும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்து வையுங்கள். மேலும் ஏதேனும் ஆப் திறந்த நிலையில் இருந்தால் அவற்றை மூடிவிட்டு சார்ஜ் செய்வது மிகவும் நல்லது. இல்லையெனில் உங்கள் சார்ஜ் வீணாக வெளியேறும்.

Smartphone

பொதுவாக நாம் அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு தூங்கும் போது இரவு முழுவதும் தொலைபேசியை சார்ஜ் போடுவது. இவ்வாறு செய்யும்போது உங்கள் போன் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய் மொபைலின் ஆயுள் குறைந்துவிடும்

மேலும், 15 சதவீதம் இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன பிறகு சார்ஜ் போட வேண்டாம். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டு விட்டு எடுத்து விடலாம் என்று 20 அல்லது 30 சதவீத சார்ஜ் ஆனவுடனே எடுக்க வேண்டாம். குறைந்தது 80 சதவீதமாவது இருக்கும் போது சார்ஜ் எடுத்து விடுங்கள். 

Smartphone

தொலைபேசி சார்ஜ் செய்யும்போது தயவு செய்து அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். எக்காரணத்தை கொண்டும் சார்ஜ் ஏறும் சமயங்களில் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள். இதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.