உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 2% அதிகரிப்பு.. அடித்து தூக்கிய ஐபோன் 16 விற்பனை.!
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது. இன்றளவில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் ஸ்மார்ட்போனில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
விற்பனை விழுக்காடு அதிகரிப்பு
இதனிடையே, ஜூலை - செப்டம்பர் காலாண்டில், உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனை என்பது 2 % அதிகரித்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஸ்மார்ட்போன் விற்பனை என்பது வளர்ச்சியை சந்தித்து இருக்கிறது.
ஆப்பிள் விற்பனை அமோகம்
குறிப்பாக உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஐபோன் 16 ஸ்மார்ட்போன்கள், இந்த காலாண்டுக்கான விற்பனையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூன்றாவது காலாண்டில் செப்டம்பரில் மட்டும் 1 % விற்பனையை ஆப்பிள் அதிகரிக்க உதவி செய்துள்ளது.
புத்துயிர் பெற்ற விற்பனை
குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்மார்ட்போன் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. மேலும், லத்தின் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் விற்பனை சந்தை புத்துயிர் பெற்றுள்ளது. சாம்சங், ஆப்பிள் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மூன்ற காலாண்டில் முதன்மை இடங்களை தக்க வைத்துள்ளன.