தமிழகம் டெக்னாலஜி

சென்னைக்கு விரைவில் வருகிறது மின்சார பேருந்து திட்டம்

Summary:

electric bus in chennai

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் மாநகரத்தில் மின்சார பேருந்து, பணிமனையினை பார்வையிட்டு, C-40 அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டார். 

சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பாதுகாக்கின்ற வகையில், தமிழ்நாடு அரசு காற்று மாசுபடுவதைக் குறைக்கின்ற வகையில், மேலை நாடுகளில் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாகக் கொண்டு, லண்டன் மாநகரத்தில் இயங்கி வரும் C-40 என்கின்ற முகமையின் வழிக்காட்டுதலின்படி,

 சென்னையில் மின்சாரம்/மின்கலன் பேருந்துத் திட்டத்தினை செயல்படுத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைக்கும், C 40 முகமைக்குமிடையே கையெழுத்தானது. 


சென்னையில் மின்சார பேருந்துகள் தொடங்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சார பேருந்து பணிமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
 


Advertisement