இது இந்தியாவில் எப்போ வரும்.... சிறுநீர் கழித்த 2 நிமிஷத்தில் ஃபுல் பாடி ரிப்போர்ட் ரெடி! மிரள வைக்கும் சீனாவின் தொழில்நுட்பம்! வைரல் வீடியோ....!!!
சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் பொதுக் கழிவறைகள் புதிய முகத்தைப் பெற்றுள்ளன. சாதாரண வசதியை தாண்டி, உடனடி மருத்துவ பரிசோதனை செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் குறித்து இந்தியப் பயணி ஒருவர் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
2 நிமிடத்தில் உடல்நிலை தகவல்
இந்த ‘ஸ்மார்ட் யூரினல்’ பயன்படுத்தும் நபர், சிறுநீர் கழித்தவுடன் அடுத்த இரண்டு நிமிடங்களில் உடல்நிலை பற்றிய முக்கிய தகவல்களை திரையில் பெற முடிகிறது. குளுக்கோஸ் அளவு, சிறுநீரக செயல்பாடு, கால்சியம், வைட்டமின் சி உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட குறியீடுகள் உடனுக்குடன் காட்டப்படுகின்றன. இதற்கு 20 யுவான் (சுமார் 230 ரூபாய்) கட்டணம் செலுத்தி QR கோடை ஸ்கேன் செய்வது மட்டுமே தேவையாகும்.
AI இணைந்த துல்லிய பரிசோதனை
இந்த அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பம் மூலம் தகவல்கள் உடனடியாக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. பெறப்படும் முடிவுகள் நேரடியாக பயனாளரின் வீசாட் செயலியில் அனுப்பப்படுகின்றன. இதனால் மருத்துவ பரிசோதனை இன்னும் எளிதாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!
பயணியின் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு
ஷாங்காயில் இந்த வசதியை பயன்படுத்திய இந்தியப் பயணி ஒருவர், சாதாரணமாக முயற்சித்தபோது தனது சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்ததை கண்டு ஆச்சரியமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவரை அணுகியதாகவும் கூறியுள்ளார். ஆரம்ப நிலையில் உடல்நிலை கண்டறிவதில் இது உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, இத்தகைய வசதி இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இத பார்க்கவே சகிக்கல....இத எப்புடி சாப்புடுறது! அரைகுறை ஆடையுடன் சிப்ஸ் கிடங்கில் உருளும் இளைஞர்! அதிர்ச்சி வீடியோ..!!!