2019ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதில் கணிக்கக்கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் இதுதானா! பட்டியல் வெளியீடு! - TamilSpark
TamilSpark Logo
டெக்னாலஜி

2019ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதில் கணிக்கக்கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் இதுதானா! பட்டியல் வெளியீடு!

தங்களது செல்போன் மற்றும் லேப்டாப்,  கம்ப்யூட்டர் போன்றவற்றில் தங்களது தகவல் எதனையும் பிறர் பார்த்து விடாமல் இருப்பதற்காகவும், அதனை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பாக பாஸ்வேர்ட் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் பாதுகாப்பாக வைக்கக்கூடிய அதனையே சோம்பேறித்தனமாக பலரும் மிக எளிதாகவும்,  பிறரால் கணிக்கக் கூடிய வகையிலும் தேர்வு செய்கின்றனர்.

 மேலும் தனது பாஸ்வேர்ட் தங்களுக்கே மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அதனை மிகவும் எளிதாக தேர்வு செய்து கொள்கின்றனர். மேலும் பலர் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் அதிக வகையில் 12345 போன்ற எண்களாகவே உள்ளது. மேலும் இத்தகைய எளிமையான பாஸ்வேர்ட்களின் மூலம் தகவல்களை எளிதில் ஹேக் செய்துவிடலாம்.

தொடர்புடைய படம்

 இந்நிலையில் 2019ல் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தக்கூடிய,  எளிதாக பிறரால் கணிக்கக் கூடிய பொதுவான பாஸ்வேர்டு குறித்த பட்டியலை splash data என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறரால் சுலபமாக கிடைக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளை வெளியிடுவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் அதனை வெளியிட்டிருந்தது.

அதன்படி எளிதில் கணிக்கக் கூடிய பாஸ்வேர்டுகளின் பட்டியல்.

  1. 123456
  2. 123456789
  3. qwerty
  4. password
  5. 1234567
  6. 12345678
  7. 12345
  8. iloveyou
  9. 111111
  10. 123123

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo