தமிழகம்

மண்டலம் வாரியாக கொரோனோ சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள் இதோ.! சென்னை மாநகராட்சி வெளியீடு!

Summary:

Zonalwise Corono treatment persion detail in chennai

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,18594 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1636 பேர் கொரோனோ பாதிப்பால்  உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் மொத்தமாக 71,116 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

தமிழகத்தில் சென்னையிலேயே கொரோனோ தொற்று பெருமளவில் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே இதுவரை 71,510 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில், தற்போது 22,374 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  அதன்படி, கோடம்பாக்கத்தில் 2,569 பேர், அண்ணா நகரில் 2,432  பேர் , தேனாம்பேட்டையில் 2,163 பேர், ராயபுரம் மண்டலத்தில் 1,964 பேர் 
தண்டையார்பேட்டையில் 1,690  பேர், திரு.வி.க. நகரில் 1,898 பேர், 
அடையாறில் 1479 பேர், 
அம்பத்தூரில் 1,221 பேர், வளசரவாக்கத்தில் 1,148 பேர் கொரோனோவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் திருவொற்றியூரில் 999 பேர்
ஆலந்தூரில் 951 பேர், பெருங்குடியில் 882 பேர், மாதவரத்தில் 829 பேர்,  
சோழிங்கநல்லூரில் 522 பேர்
மணலியில் 496 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement