சாமி கும்பிட வந்த போது விபரீதம்!..வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்!.. தேடும் பணி தீவிரம்..!

சாமி கும்பிட வந்த போது விபரீதம்!..வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்!.. தேடும் பணி தீவிரம்..!


Youths dragged into the vaigai River

மதுரை, தெற்கு வாசல் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் தனசேகரன்( 23) இவர் எம்.எஸ்.சி பட்டதாரி. மதுரை, திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஞானமணி என்பவரது  மகன் கண்ணன்(20). இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில், பரவை பகுதியில் உள்ள வைகை ஆற்று புது பாலம் எதிரில் துவரிமான் பிரிவில் உள்ள சாலைக்கரை முத்தையா சுவாமி கோயிலில் நேற்று பிற்பகல் தங்களது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தனர்.

இதற்கிடையே, இவர்கள் இருவரும் குளித்துவிட்டு வருவதாக கூறி, புது பாலத்திற்கு அடியில் வைகை ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அபோது இருவரும் பேச்சு சுவாரசியத்தில் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றனர்.  அங்கு திடீரென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.