மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்..!

மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்..!


Youth stabbed to death with liquor bottle: Special police force to nab the killers

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள குரும்பூர் பகுதியில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் அடையாளர் தெரிந்தது. அவரை கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கொலையான வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், கொலையான வாலிபர் விக்னேஷ் என்பதும் இவரது சொந்த ஊர் எட்டயபுரம் சாலையிலுள்ள சங்கராபேரியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் விக்னேஷ் (28) என தெரிய வந்தது.

தற்போது இவர் தூத்துக்குடி அண்ணா நகர் 4 வது தெருவில் வசித்து வந்தார். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பல நண்பர்கள் வட்டாரம் அதிகம் என்றும், அவர்களுடன் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று மது குடிக்கும் பழக்கத்தை இவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று தண்ணீர்பந்தல் பகுதியில் மர்மமான முறையில் மர்மநபர்களால் மதுபாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.