குடி போதையில் ரவுண்டு கட்டிய இளைஞருக்கு நேர்ந்த கதி: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!youth-died-mysteriously-at-erode-district-village

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஜேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (27). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்தில் ஊறிப்போன மோகன்குமார் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று மாலை மின் கசிவு காரணமாக மோகன்குமாரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, குடி போதையில் இருந்த மோகன்குமார் கழியால் அடித்து மின்சார ஓயரை துண்டித்து விட்டு தீயை அணைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அவர் வீடு இருந்த தெருவில் யாரையும் குறிப்பிடாமல் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை நீண்ட நேரம் அவர் எழுந்து வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  அவரது குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மோகன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.