காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: இளைஞர் செய்த காரியத்தால் கதிகலங்கிய சிறுமியின் அண்ணன்..!

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: இளைஞர் செய்த காரியத்தால் கதிகலங்கிய சிறுமியின் அண்ணன்..!


Youth arrested under POCSO Act for taking video of girl who refused to love him while taking bath

சென்னை, மேடவாக்கம் அருகேயுள்ள சித்தலப்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் நகர், 18வது தெருவை சேர்ந்தவர் விஜய் (21). இவர் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியில் வசிக்கும் 16வயது சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிறுமியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த சிறுமி ஒப்புக் கொள்ளாததால், அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக சிறுமிக்கு தெரியாமல் அவர் குளிக்கும்போது, வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சிறுமியின் சகோதரருக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர், சிறுமியின் சகோதரரிடம், இந்த வீடியோவை தனக்கு யாரோ வாட்சப்பில் அனுப்பி வைத்ததாகவும், அதை அவருக்கு பகிர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் சகோதரர், இது குறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விஜய்யை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில், வீடியோ எடுத்தது விஜய் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஜய்யை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.