அட பாவிகளா... இது சினிமாவுலயே இல்லையே.!! காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்.!

அட பாவிகளா... இது சினிமாவுலயே இல்லையே.!! காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்.!


youngsters dance on police car

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா நடைபெற்றது. பசும்பொன்னில் நேற்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வந்தனர்.

பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லாயிரம் போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கமுதியில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டுள்ளனர்.

பல லட்சம் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிட கூடாது என்பதற்காக போலீசாரும் அமைதி காத்துள்ளனர். தேவர் ஜெயந்தி விழாவில் போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி நின்று நடனமாடிய இளைஞர்கள் மீது விழா முடிந்ததும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.