தமிழகம்

திருமண நிச்சயம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாண படத்தை வெளியிட்ட இளைஞர்.! நைசாக பேசி வரவழைத்து தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.!

Summary:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் மேகநாதன். 27 வயது நிரம்பிய இவ

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் மேகநாதன். 27 வயது நிரம்பிய இவர் சேலத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் மேகநாதனுக்கும் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில் இருவரும் நேரில் சந்தித்தும் பழகி வந்துள்ளனர். அப்போது அவர்கள் நெருக்கமாக இருப்பதை போல புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவி, தனது காதலனிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலக முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன் அவர்கள் பழகி வந்த போது வீடியோகாலில் உள்ளாடையின்றி பேசிய ஸ்க்ரீன் ஷாட்டுகளை அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் செய்ய இருந்த மணமகனின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஸ்க்ரீன் ஷாட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் நிச்சயதார்த்தத்தை உடனடியாக நிறுத்தியதாக கூறப்படுகிறது.

திருமணம் நின்றுபோன விரக்தியில் அந்த பெண் மனவேதனையடைந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறியதையடுத்து  மேகநாதனிடம், கல்லூரி மாணவி செல்போனில் தொடர்பு கொண்டு, தனது கிராமத்துக்கு வந்து தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவி நைசாக பேசினார். 

உச்சகட்ட மகிழ்ச்சியில் அந்த பெண்ணை சந்திக்க வந்த மேகநாதனை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேகநதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement