தமிழகம்

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அண்ணியின் தங்கையை வீட்டிற்கு அழைத்துவந்து இளைஞன் செய்த கொடூரம்!

Summary:

young man killed young girl


தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலா என்ற பெண் சென்னையில் லேப் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்துள்ளார். அகிலாவின் அக்காவிற்கு திருமணமாகி அவர்களது குடும்பமும் சென்னையில் இருந்துள்ளது. அகிலா பெண்கள் விடுதியில் இருந்துவந்துள்ளார்.

அகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் பழக்கம் இருந்துள்ளது. சந்தோஷ் அவரது அண்ணனுடன் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் அவரது அண்ணன், அண்ணி இருவரும் ஊருக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில், சந்தோஷ் அகிலாவிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அவரது வீட்டில் தூங்கிய அகிலா காலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அகிலாவை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் சந்தோஷ். அங்கு அகிலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அகிலாவை  வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், வீட்டில் உள்ள கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் காலையில் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறிய பதிலால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , காவல்துறையில் புகார் அளித்தனர். அகிலாவின் பிரேத பரிசோதனையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் சந்தோஷிடம் தீவிர விசாரணை செய்ததில், சந்தோஷ் அகிலாவை காதலித்து வந்ததாகவும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரியவந்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாககூறியுள்ளார். பின்னர் போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.


Advertisement