வீட்டில் உள்ள அனைவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.! அதிர்ச்சி காரணம்.!



young man killed his family members and commit suicide


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் பார்க் அவன்யூ பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயதாஸ் என்பவருக்கு ஜெகன், ஜேக்கப் என 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயதாஸ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜெயதாஸ் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஜேக்கப் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயதாஸ், அவரது மனைவி சாலினி மற்றும் ஜெகன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில்ஜேக்கப் கடந்த சில நாட்களாக திடீரென கோபப்படுவது, தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக சத்தம் போடுவது என இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜேக்கப், அவரது அண்ணன் ஜெகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த தந்தை ஜெயதாஸ், தாயார் சாலினி ஆகியோரையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.