15 வயது சிறுவன் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

15 வயது சிறுவன் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!Young man harassment to boy in kampam

கம்பம் அருகே 15 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கம்பம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை மிரட்டல் விடுத்து, தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

harassment

இதனையடுத்து தப்பி சென்ற சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் கம்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில், சாட்சியங்கள் அடிப்படையில் விஜய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

harassment

இதில், குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.