திருப்பூரில் அதிர்ச்சி... பைக்கின் மீது சாய்ந்த நிலையில் பறிபோன உயிர்.!! கபடி வீரருக்கு நேர்ந்த சோகம்.!!



young-man-dies-of-heart-attack-while-riding-bike-video

திருப்பூர் மாவட்டத்தில் 23 வயது வாலிபர் தீடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பைக்கின் மீது சாய்ந்தபடி கீழே விழுந்து இறந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள  திருமுருகன் பூண்டி விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரின் மகனான  நவீன் குமார்(23), இவர் கபடி வீரர் ஆவார். தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்த இவர் பணி முடிந்து அலுவலகத்திற்கு வெளியே தனது வாகனத்தில் வீட்டுக்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பைக்கின் மீது சாய்ந்தபடி சில நொடிகளில் மயங்கி உயிரிழந்துள்ளார்.

Tirupur

கீழே விழுந்த சத்தம் கேட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரைடைப்பால் இறந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  அவர் மாரடைப்பால் உயிரிழந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சிடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!

இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில் கொலை.. தடுக்க வந்த மகளும் படுகாயம்.. தந்தை வெறிச்செயல்.!