வெளிநாட்டில் இருக்கும் கணவன்கள்! தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

வெளிநாட்டில் இருக்கும் கணவன்கள்! தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!



young man arrestred for cheating lot of women

சென்னை வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை திரும்பினார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், அப்போது அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

 அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார். விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உதயகுமார், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விக்னேசை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து இருந்த விக்னேசை வேளச்சேரி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

arrest

கைது செய்த விக்னேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் பழகி பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர்.

இவர்களில் வசதியான பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது தனது குடும்ப கஷ்டம் என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளான். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளார் விக்னேஷ். இதனையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.