தமிழகம்

தூங்கும்போது சிறுமியின் கழுத்தில் தாலியை பார்த்த பெற்றோர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! போக்சோவில் சிக்கிய நபர்.!

Summary:

தூங்கும்போது சிறுமியின் கழுத்தில் தாலியை பார்த்த பெற்றோர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! போக்சோவில் சிக்கிய நபர்.!

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கடந்த 27ம் தேதி  காவல் நிலையத்தில், தனது 16 வயது மகளை காணவில்லை. அவளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், திருமங்கலம் போலீசார், சிறுமியின் படத்தை அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் வாலிபர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு அங்கிருந்து வாலிபரையும் சிறுமியையும் மீட்டனர். பின்னர் அவர்களை திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி கூறுகையில், இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகாதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு  கோயிலில் தாலி கட்டிக்கொண்டோம்.

இதனையடுத்து  நான் என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என் கழுத்தில் இருந்த தாலியை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்தேன். ஒருநாள் பெற்றோர் கண்டுபிடித்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தாலியை கழட்டிவிட்டு என்னை கடுமையாக எச்சரித்தனர். நடந்தவற்றை காதலனிடம் கூறியதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் மிளவுஅழகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் சிறுமியை கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து கடத்திச்சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு கோயிலில் மீண்டும் தாலிகட்டி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிளவு அழகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Advertisement