திருமணம் ஆன சில மாதங்களில் மனைவி தற்கொலை! இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்! கணவன் கைது! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

திருமணம் ஆன சில மாதங்களில் மனைவி தற்கொலை! இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்! கணவன் கைது!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலே கணவன்- மனைவிக்கு  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனையடுத்து  நிரேஷ்குமாரின் மனைவி கணவனை பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சில நாட்களாக மனவேதனையில் இருந்த அவர் கடந்த 29-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பிரியங்கா தற்கொலைக்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில் திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாய் 120 பவுன் நகைகள் கேட்டனர். ஆனால் அவர்கள் கேட்ட அணைத்து நகையையும் கொடுக்கமுடியவில்லை. இதனால் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் என்னை கொடுமைப்படுத்தினர். அவர்கள் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து  நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்து, நிரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo