தமிழகம்

போண்டா சாப்பிட்ட இளம் பெண் உயிர் இழப்பு.! மயங்கி விழுந்த குடும்பத்தினர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

Summary:

Young girl make bonda using poison and died

மைதா மாவுடன் பூச்சிக்கொல்லி மருந்தையும் கலந்து போண்டா சுட்டு சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மருமகள் பாரதி. ஊரடங்கு என்பதால் வீட்டிலையே இருக்கும் பாரதி போண்டா சுடலாம் என்று யோசித்து அதற்கான பொருட்களை வாங்கிவருமாறு தனது மாமனாரிடம் கூறியுள்ளார்.

பெரியசாமியும் வெளியே சென்று போண்டா சுடுவதற்கான பொருட்களை வாங்கிக்கொண்டு அதனுடன் வயலுக்கு பயன்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கிவந்துள்ளார். வாங்கி வந்த பொருட்டுகளை மருமகளிடம் கொடுத்துவிட்டு பெரியசாமி வெளியே சென்றுவிட்டார்.

இந்நிலையில், பூச்சிக்கொல்லி மருந்தை மைதா மாவு என நினைத்து இரண்டையும் கலந்து பாரதி போண்டா சுட்டு தனது கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். போண்டா சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்தப்பகுதி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement